fbpx

செம வாய்ப்பு…! 250 நாட்டுக்கோழி வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம்…! எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…

சேலம்‌ மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில்‌ 50% மானியத்தில்‌ 250 எண்ணிக்கையில்‌ நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலம்‌ 2023-24 ஆம்‌ நிதியாண்டில்‌ நாட்டு கோழிவளர்ப்பில்‌ திறன்‌ வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும்‌ திட்டம்‌ செயல்படுத்த மாவட்டம்‌ ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில்‌ பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள்‌ சம்பந்தப்பட்ட கிராமத்தில்‌ நிரந்தரமாக வசிப்பவராகவும்‌, கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம்‌ 625 சதுர அடி நிலம்‌ கொண்டவராகவும்‌, அந்நிலம்‌ மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும்‌ இருக்க வேண்டும்‌.

நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில்‌ 50% மானியம்‌ (ரூ.150,625 அதிகபட்ச வரையறை) மாநில அரசால்‌ வழங்கப்படும்‌. ஒவ்வொரு பயனாளிக்கும்‌ 250 எண்ணம்‌ 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள்‌ ஒசூர்‌ மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்‌. விதவைகள்‌, ஆதரவற்றோர்‌,திருநங்கைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. தேர்வு செய்யப்படும்‌ பயனாளிகளில்‌ 30% பழங்குடியினர்‌ மற்றும்‌ பட்டியல்‌ வகுப்பினராக இருக்க வேண்டும்‌.

2022-23-ஆம்‌ ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைந்திருக்கக்‌கூடாது. 3 ஆண்டுகாலம்‌ கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ இத்திட்டத்தில்‌ பயன்பெற விரும்புபவர்கள்‌ 30.06.2023 ஆம்‌ தேதிக்குள்‌ அருகில்‌ உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

Vignesh

Next Post

அனைத்தும் தயார்..! 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

Wed Jun 14 , 2023
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை […]

You May Like