fbpx

ஆபாசமாக திட்டிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியத்தால் பிணமாக மீட்பு.!

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகரன் என்பவர் கார்த்திகை செல்வி (வயது 35 ) என்ற மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பால சத்தியா என்ற 10 வயது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கார்த்திகை செல்வி ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் ராஜசேகர் தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

எனவே தலைமறைவாகி இருந்த அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்த நிலையில், ராஜசேகரன் தனியார் ஷோரூம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். கார்த்திகை செல்வி வீட்டில் இருந்தவாறு தையல் தொழில் செய்து சம்பாதித்து வந்துள்ளார்.

வீட்டில் பண பிரச்சினை ஏற்பட்டதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. ராஜசேகரன் குடித்துவிட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அழித்து வந்துள்ளார். இதை செல்வி தட்டி கேட்டுள்ளார்.

அப்போது தகாத வார்த்தை சொல்லி கணவனை திட்டியவுடன் ஆத்திரமடைந்த ராஜசேகரன் மனைவியை ரீப்பர் கட்டையை எடுத்து மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ராஜசேகரன் தப்பியோடி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

Bigg Boss 6 Tamil..!! ’நண்பர்களே தலைவருக்கு லெட்டர் வந்துருக்கு’..!! யார் அனுப்பிருக்கா தெரியுமா..?

Sun Oct 16 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.  விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார் […]
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜிபி முத்து..!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

You May Like