OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆண் குழந்தை பிறந்த செய்தியை X இல் பகிர்ந்து கொண்டார், “நான் இவ்வளவு அன்பை ஒருபோதும் உணர்ந்ததில்லை” என்ற செய்தியுடன் தனது ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அந்த பதிவில், “Welcome to the world, Little Guy! அவன் சீக்கிரமா வந்துட்டான், கொஞ்ச நாள் NICU-ல இருக்கப் போறான். அவன் நல்லா இருக்கான், அவனைப் பார்த்துக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு அன்பை நான் இதுவரைக்கும் உணர்ந்ததில்லை” என்று பதிவிட்டிருந்த ஆல்ட்மேன், அவரின் விரலை குழந்தை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பெற்றோராக இருப்பது வாழ்க்கையின் மிகவும் பலனளிக்கும் அனுபவங்களில் ஒன்றாகும் என்று விவரித்தார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சாம்! பெற்றோர்மை என்பது வாழ்க்கையின் மிக ஆழமான மற்றும் பலனளிக்கும் அனுபவங்களில் ஒன்றாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று நாடெல்லா X இல் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சாம் ஆல்ட்மேன்? நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Y Combinator இன் முன்னாள் தலைவருமான சாம் ஆல்ட்மேன், ஹவாயில் நடைபெற்ற அந்தரங்க விழாவில் தனது நெருங்கிய நண்பரான Oliver Mulherin உடன் திருமணம் செய்து கொண்டார். அவரது அந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தீவில் உள்ள ஆல்ட்மேனின் குடியிருப்புக்கு அருகாமையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்தேறியது.
Read more : கப்பல் பயணிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு..!! அறிகுறிகள்.. காரணங்கள்.. தடுக்கும் வழிமுறைகள் இதோ!