fbpx

திருமணம் தாண்டிய உறவு.. பழகுவதை நிறுத்தியதால் இளம் பெண் கொடூர கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சந்திரலிங்கம். இவருடைய மனைவி தேவிகலா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு லிங்கராஜா தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. தகாத உறவு குறித்து தேவிகலாவை அவரது கணவர் கண்டித்துள்ளார்.

இதனால் லிங்கராஜா உடன் பேசுவதை தேவிகலா நிறுத்திக் கொண்டார். நேற்று காலை 9.30 மணியளவில் தேவிகலா தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அபோது அங்கு பைக்கில் வந்த லிங்கராஜா, என்னுடன் ஏன் பேசுவதில்லை என தேவிகலாவிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் சரிவர பதில் தெரிவிக்காத நிலையில், இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிங்கராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவிகலாவை சரமாரியாக குத்தினார்.

தேவி கலாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அதற்குள் அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இது குறித்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் போலீசார் தேவி கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலீசாரின் விசாரணையில் தேவி கலாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பதும் தெரியவந்துள்ளது.

தேவி கலாவை என்ன காரணத்திற்காக லிங்கராஜ் கொலை செய்தார் என்ற விபரம் எதுவும் தெரியாத நிலையில் லிங்கராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது.

Read more ; கள்ளக்காதலனுடன் கலகல பேச்சு..!! திடீரென பேச்சை நிறுத்தியதால் வெறியான இளைஞர்..!! நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Next Post

“கள்ளக்காதலன் இருக்கும் போது, குழந்தை எதுக்கு”; 5 வயது மகளை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தாய்..

Tue Nov 26 , 2024
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர், தனது 5 வயது மகள் இறந்து விட்டதாக கூறி, மகளின் சடலத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பார்த்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம், குழந்தையின் கழுத்தில் கழுத்தை நெரித்ததற்கான தடம் இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் […]

You May Like