ஒரே பாலின திருமணங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது
திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் என்ற தலைப்பில், ஒரே பாலின திருமணங்களை பாதுகாப்பதற்கான சட்டம் 267-157 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது, 47 குடியரசுக் கட்சியினர் அனைத்து ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 குடியரசுக் கட்சியினர் வாக்களிக்கவில்லை.
இந்த மசோதா இப்போது செனட் சபைக்கு வாக்கெடுப்புக்குச் செல்லும். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில் ஜனநாயகக் கட்சியினருக்கு 50 இடங்கள் உள்ளன,
திருமணத்திற்கான மரியாதைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளைத் தவிர்க்கும் பட்சத்தில், LGBTQ உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்முயற்சி நடவடிக்கையாக ஜனநாயக கட்சியினர் இந்த சட்டத்தை வாக்கெடுப்புக்கு அதைக் கொண்டுவந்தனர்.
நேற்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடந்த விவாதத்தின் போது, மசோதாவின் ஆதரவாளரான ரெப் ஜெர்ரி நாட்லர் “திருமண சமத்துவம் என்பது நாட்டின் சட்டமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறடு.. திருமண சமத்துவம் “இருக்க வேண்டும்.. தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கட்டியெழுப்பும் அனைத்து திருமணமானவர்களும் தங்கள் திருமணங்களை அரசாங்கம் எப்போதும் மதிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்..