fbpx

“விஜய்யை பிரிந்து சென்ற சங்கீதா…” பத்திரிகையாளர் அளித்த பரபரப்பு பேட்டி.. சோகத்தில் ரசிகர்கள்..

விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், சமீப காலமாகவே விஜய் த்ரிஷா குறித்த கிசுகிசுப்புகள் வைரலாகி வருகிறது. விஜயின் பிறந்த நாள் அன்று லிப்டில் எடுத்த புகைப்படத்தை திரிஷா பகிர்ந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, லியோ படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி, கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜயும் திரிஷாவும் தனியார் ஜெட் விமானத்தில் ஒன்றாக கோவா சென்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் கீழே பலே பலவிதமான கமெண்டுகளை பகிர்ந்தனர். அதில் ஒருவர், “நீங்கள் போஸ்ட் போடுறீங்க. ரசிகர்கள் வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள். ப்ளீஸ் நீங்கள் விஜய்யிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் நல்லது. புரிந்துகொள்ளுங்கள். நீங்களும் ஒரு பெண்தானே” என்று பதிவிட்டு இருந்தார்.  மேலும் சங்கீதா அண்ணிக்கு நியாயம் வேண்டும் என்ற ஹாஷ்டேக் டிரென்ட் ஆனது. அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா, தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறுகையில், “கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு 6 பேர் உள்ள விமானத்தில் சென்றார்கள். அதில் விஜயும் திரிஷாவும் மட்டும் காரில் சென்றார்கள். இதுதான் உண்மையான விஷயம். சங்கீதாவுக்கு நடக்கும் அநியாயம் இதுதான். மேலும், இதனால் தான் விஜயின் பையன் வீட்டை விட்டு வெளியே சென்றான். அப்பாவை பார்க்க நிறைய நடிகைகள் வாராங்க, இருக்காங்க, இதை பார்க்க முடியல” என்று கூறி விஜயின் மகன் வீட்டை விட்டு வெளியே சென்றாதாக அவர் கூறினார். அதைப்போல சங்கீதாவும் விஜயை பிரிந்து லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என்று அவர் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: “நிர்வாணமா ரோட்டுல நின்னேன்” பிரபல நடிகர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..

English Summary

sangeetha got seperated from vijay

Next Post

பூனையை கொஞ்சிய கணவன்; விவாகரத்து கேட்ட மனைவி; நீதிபதியையே திணற வைத்த விசித்திர வழக்கு..

Mon Dec 16 , 2024
woman demanded divorce from her husband who pets his cat

You May Like