fbpx

துப்புரவு தொழிலாளர்கள் ஆணைய பதவிக்காலம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிப்பு…!

தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தின் (என்.சி.எஸ்.கே) பதவிக்காலத்தை 31.03.2025 க்குப் பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது 31.03.2028 வரை இந்த ஆணையம் செயல்படும். என்.சி.எஸ்.கே மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கான மொத்த நிதி செலவு தோராயமாக ரூ.50.91 கோடியாக இருக்கும்.

துப்புரவுத் தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, துப்புரவு துறையில் பணி நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் அபாயகரமான துப்புரவு பணிகளை மேற்கொள்ளும்போது பூஜ்ஜிய இறப்பை அடைவதற்கு தகவல் தொழில்நுட்பம் உதவும். கைகளால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (எம்.எஸ் சட்டம் 2013)-இன் கீழ், என்.சி.எஸ்.கே கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும்.

அதன் படி, இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது, சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணா புகார்களை விசாரித்து, தேவைப்படும் பரிந்துரைகளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பது, சட்டத்தின் விதிகளை திறம்பட செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குவது, இந்தச் சட்டத்தை அமல்படுத்தாதது தொடர்பான விஷயங்களை தானாக முன்வந்து விசாரிப்பது ஆகும்.

English Summary

Sanitation Workers Commission term extended until 2028

Vignesh

Next Post

பழிக்குப் பழி!. "ஜோ, நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டீர்கள்"!. பாதுகாப்பு அனுமதிகளை ரத்து செய்த டிரம்ப்!.

Sat Feb 8 , 2025
Blame for blame!. "Joe, you're fired"!. Trump revokes security clearances!.

You May Like