தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாள் அளித்த விடுமுறையை ஈடு செய்ய வரும் சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 24ம் தேதி அரசு விடுமுறை. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயி எனவே பண்டிகைக்கு அடுத்த நாள் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காகவும் விடுமுறை வழங்க கோரிக்கை விடப்பட்டது. எனவேகோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அக்டோபர் 25ம் தேதி விடுமுறை அளித்தது.
அக்டோபர் 25ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை 19.11.2022 பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.