ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பிசினஸ் கரஸ்பாண்டன்ட் ஃபெசிலிடேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 868 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் எஸ்பிஐ வங்கிகளின் விதிமுறைகளின் படி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பாக 65 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக 40000 ரூபாய் வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக 31.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு எந்த வித கட்டணமும் இல்லை. விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய sbi.co.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.