fbpx

1-ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

இது குறித்து தர்மபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022 – 23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகையும்‌, 11 ஆம்‌ வகுப்பு முதல்‌ ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக்‌, செவிலியர்‌ / ஆசிரியர்‌ பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள்‌ உட்பட ) பயில்பவர்களுக்கு பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகையும்‌ மற்றும்‌தொழிற்கல்வி மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும்‌வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில்‌ ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும்‌, பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும்‌மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இந்திய அரசின்‌ தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில்‌ ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள்‌ தங்களின்‌ கல்விநிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின்‌ ஆதார்‌ விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில்‌ சரிபார்க்க இயலும்‌. புதியதாக விண்ணப்பிக்கும்‌ மாணவ, மாணவியர்கள்‌ இணையதளத்தில்‌ எளிதாக விண்ணப்பிக்கும்‌ வகையில்‌ அனைத்து கல்வி நிலையங்களும்‌ UDISE/AISHE/ NCVT குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

இத்திட்டம்‌ தொடர்பான இந்திய அரசால்‌ வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்‌ https://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்‌.க்ஷ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திசாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

ரூ.14,000 ஊதியம்... ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Wed Aug 3 , 2022
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Apprentices பணிக்கு 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு […]

You May Like