fbpx

ஆஹா…! மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ, மாணவியர்கள்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ பிற்படுத்தப்பட்ட, மிகப்‌ பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்‌ மரபினர்‌ மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு (இலவச கல்வித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்‌ தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக்‌, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000/-க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு இணையதளம்‌ புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள்‌ 06.12.2022-க்குள்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌. அதேபோல்‌ புதிய இனங்களுக்கு இணையதளம்‌ 15.12.2022 முதல்‌ செயல்படத்‌ துவங்கும்‌. புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள்‌ 20.01.2023.க்குள்‌ இணையதளம்‌ மூலம்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

Vignesh

Next Post

UTS: ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான தூரக் கட்டுப்பாட்டை தளர்வு....!

Sat Nov 12 , 2022
புறநகர் அல்லாத ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதிக்கும். ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் வகையில், UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இது இப்போது 5 கி.மீ. புறநகர் பகுதிகளில், தற்போதுள்ள […]

You May Like