fbpx

வாவ்..‌.! 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…! முழு விவரம்

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக 29.09.2023 அன்று நடைபெறவிருந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு பயின்றுவரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்துத் தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.

Vignesh

Next Post

என்னது?… முழங்கால் வரை தேங்காய் எண்ணெய் தடவினால் டெங்கு காய்ச்சல் வராதா?… உண்மை என்ன?

Tue Oct 10 , 2023
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. ‘ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்’ என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். அந்தவகையில், நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி (ஆன்டிசெப்டிக்). மேலும் டெங்கு கொசுக்களால் முழங்கால் உயரத்துக்கு மேல் பறக்க […]

You May Like