சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல் 5 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1000/-, 6 முதல் 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ. 3000/-, 9 முதல் 12 வரை மற்றும் IIT, Diploma பயின்று வருபவர்களுக்கு ரூ.4000/, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6000/, முதுகலை, பி.இ, எம்.பி.பி.எஸ்பயின்று வருபவர்களுக்கு ரூ.7000/- என்ற வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் 9-ஆம் வகுப்பு முதல் கல்வி பயில்பவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.250 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.