திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லாம்பிள்ளையில் பழனிசாமி என்பவர் தனது மகன் பிரமோத்(14) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனை தொடர்ந்து தோட்டத்திலுள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத சிறுவன் கிணற்றின் சுவரில் அமர்ந்து கொண்டு குளிக்கும் நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து பிரமோத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் மோட்டாரினை பயன்படுத்தி கிணற்றிலிருக்கும் தண்ணீரை வெளியேற்றினர்.
அதன்பிறகு 8 மணி நேரத்திற்கு பின்பு சிறுவனின் உடலை மீட்டனர். இதனையடுத்து சிறுவனின் உடல் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.