திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் 52 வயது சீனிவாசன். இவர், திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சீனிவாசன், வீட்டிற்க்கு வந்த மாணவர்களின் உதட்டில் முத்தமிட்டுள்ளார். மேலும், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன மாணவர்கள், நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளானர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளிக்கு நேரடியாக சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் உறவினர் 1098 என்ற தொலைபேசி எண் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: “நீ எப்போ வேனாலும் என் பொண்ணு கூட உல்லாசமா இருக்கலாம்” கொடூர தாயால், பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்..