கோடை விடுமுறை முடிவடைந்து இன்று வகுப்புகள் ஆரம்பமான நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை பூங்கொத்து, இனிப்பு ஆகியவற்றை கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பையா மணி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது தமிழ்நாடு முழுவதிலும் இன்று 8340 நடுநிலைப்பள்ளிகள், 3547 உயர்நிலைப் பள்ளிகள், 4,221 மேல்நிலை பள்ளிகள் என்று மொத்தமாக 16,108 பள்ளிகள் திறக்கப்பட்ட இருப்பதாகவும் கோடை விடுமுறை முடிவடைந்து 6️ முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 46,22,324 மாணவர்கள் வர இருப்பதாகவும் கூறினார்.
இலவச மடிக்கணினி திட்டம் சென்ற 3 வருடங்களாக வழங்கப்படாத தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் நிதி நிலைமை சரியான உடன் மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறினார்.