தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள மிட்டாசின்ன அள்ளியில் ராஷ்மிகா 17 என்கிற இளம்பெண் , தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஙகே இருக்கின்ற அரசுப் பள்ளியி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமா கொண்டிருந்த அவர் 16 ஆம் நாள் அன்று சைக்கிளில் சென்றுள்ளார்.
அன்றைய பள்ளி நாள் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நிலையில் மோட்டார் வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அந்த சிறுமியை வழிமறித்து நிறுத்தி வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்றுள்ளனர். மறைவான இடத்தில், அந்த இரு நபரும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர்.
இதனிடையே வெகு நேரமாகிய நிலையில், மாணவி வீடு திரும்பாததால் அவருடைய பாட்டி உறவினர்களுடன் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். அந்த சிறுமி வழக்கமாய் வரும் பாதையில் சைக்கிள் கிடந்ததைப் பார்த்த உறவினர்கள் காட்டுப்பகுதியில் உள்ளே சென்று தேடிப்பார்த்துள்ளனர். இந்த நிலையில், ஒரு முட்புதரில் சிறுமி மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. அத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையின் விசாரணையில், இண்டூர் பகுதி கல்லூரி மாணவர் மற்றும் அவரின் நண்பரும் தான் இதனை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.