திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது பற்றி திருப்பூர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்,காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை மாவட்ட பகுதி மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ரியாஸ் அகமது மற்றும் மாணவியை போலீசார் மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது ரியாஸ் அகமது, மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து , ரியாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.