fbpx

“அப்பா, எங்க சார் என்ன இங்க தொட்டாரு” வீட்டிற்க்கு வந்த மகள் கூறியதை கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, அய்யனேரி ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் பகுதியைச் சேர்ந்த, 57 வயதான தாமோதரன் என்பவர் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர், கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தனது பெற்றோரிடம், தலைமையாசிரியர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன் மற்றும் போலீசார் தலைமையாசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சமீப காலமாக, ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாகவும், பெண் பிள்ளைகளை அனுப்பி விட்டு நாள் முழுவதும் பயத்துடன் இருப்பதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Read more: சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

English Summary

school-girl-was-abused-b-her-sir-in-school

Next Post

"குடும்பத்தோடு உட்கார்ந்து 'அந்த' படத்தை பார்த்தோம்..." பரபரப்பை கிளப்பிய நிவேதா பெத்துராஜ்..

Wed Nov 27 , 2024
nivetha-pethuraj-opens-up-about-her-movie-selection

You May Like