கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகங்கையில், வீட்டின் வெளியே 7 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ராஜேந்திரன் என்ற முதியவர் ஒருவர், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய், தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் மீது சிவகங்கை கோட்டில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சிவகங்கை போக்ஸோ சிறப்பு கோர்ட் விசாரணை நடத்தி வந்துள்ளது. இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ராஜேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சமும் இழப்பீடு வழங்கவும் கோர்ட் தற்போது உத்தரவிட்டுள்ளது.
Read more: மகளிடம் அத்துமீறிய கணவன்; தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…