fbpx

பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா; 8-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்..

13 வயது சிறுமி ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் எதிர் வீட்டில் 62 வயதான தாத்தா முறை கொண்ட நாகராஜ் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21.10.2023 தேதி அன்று நாகராஜ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை சிறுமி வெளியே யாரிடமும் சொல்லாததை சாதகம் ஆக்கிக்கொண்ட நாகராஜ், சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சிறுமி இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகராஜ் குற்றவாளி என்பதை உறுதி செய்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரத்த பந்தம் கொண்ட தாத்தாவே தனது பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: முந்திரி காட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்; விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண் பலாத்காரம்..

English Summary

school-girl-was-sexually-abused-by-grandfather

Next Post

கணவரின் சொந்தக்காரனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்; கணவருக்கு வந்த புகைப்படத்தால் அதிர்ச்சி..

Sat Nov 16 , 2024
woman-was-in-illicit-relationship-with-husbands-relative

You May Like