fbpx

வேலைக்கு செல்லும் பெற்றோர்களே கவனம்!! வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

ஈரோடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், பள்ளி முடிந்த பிறகு சிறுமி வீட்டில் தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த சுப்பிரமணியம் என்ற கூலித் தொழிலாளி ஒருவர், சிறுமியின் வீட்டிற்க்குள் நுழைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சுப்பிமணியம் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

இதனால் பதறிப்போன சிறுமி, கதறி அழுதுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர் வீட்டிற்க்கு வந்த உடன், சிறுமி தனக்கு நடந்ததை எல்லாம் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார் சுப்பிமணியம் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுப்பிரமணியம்மை போலீசார் தற்போது கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more: தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?? அப்போ தொடர்ந்து இந்த காய் சாப்பிடுங்க..

English Summary

school-girl-was-sexually-abused-by-her-neighbour

Next Post

குளிர்காலத்தில், குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

Fri Nov 29 , 2024
can-we-give-curd-to-babies-in-winter

You May Like