fbpx

“நான் தான் முதல்ல பலாத்காரம் பண்ணுவேன்” தந்தையின் கண் முன் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…

மாடு வியாபாரி ஒருவர், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரது 13 வயது மகள், வீட்டின் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ஆந் தேதி 7.30 மணியளவில் சிறுமி வீட்டின் அருகே உள்ள புதர் மறைவு பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு அணைக்கட்டு தாலுகா தாங்கல் கிராமத்தை சேர்ந்த 28 வயதான வீரப்பன், 28 வயதான இளமதன், 30 வயதான சின்னராசு ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். மதுபோதையில் இருந்த 3 பேரும், சிறுமியை பார்த்ததும் அவரது வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கி சென்றுள்ளனர். அங்கு வைத்து 3 பேரும் நான் தான் முதலில் பலாத்காரம் பண்ணுவேன் என்று போட்டி போட்டுக்கொண்டு சிறுமியை மிரட்டி மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே, இயற்கை உபாதைக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த தந்தை, கையில் டார்ச்சுடன் புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சிறிது தூரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விரைந்து ஓடி சென்று பார்த்துள்ளார். அப்போது, அலங்கோலமான நிலையில் கிடக்கும் தனது மகளை, மனித மிருகங்கள் பலாத்காரம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுமியின் தந்தையை பார்த்ததும், அங்கிருந்து வீரப்பன், இளமதன், சின்னராசு ஆகியோர் தப்பி ஓடியுள்ளனர். தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த தந்தை அவரது மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஒருகட்டத்தில், அவரது மகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த தொழிலாளி, சம்பவம் குறித்து நேற்று முன்தினம் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், எல்லை பிரச்சினையால் அவரிடம் புகார் பெறாமல் போலீசார் அவரை அலைக்கழித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சிறுமி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஆய்வாளர் காஞ்சனா விசாரணை நடத்தி வீரப்பன், மதன், சின்னராசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more: தினமும் 11 நிமிடங்கள் நடந்தால் போதும்.. இந்த நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்..

English Summary

school-girl-was-sexually-harassed-in-front-of-her-father

Next Post

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? - விவரம் உள்ளே

Wed Nov 20 , 2024
The half-yearly examination schedule for classes 6 to 12 in government, government-aided and private schools has been released.

You May Like