fbpx

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஓரிரு இடங்கிளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Schools and colleges to remain closed in Mayiladuthurai district today due to heavy rain

Vignesh

Next Post

ஷாக்!. 1 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!. UNICEF எச்சரிக்கை!.

Wed Nov 13 , 2024
Shock!. The lives of more than 1 crore children are at risk! UNICEF alert!

You May Like