fbpx

வாட்டும் வெயில்!… இனி ஏசி தேவையில்லை!… ஃபேன் காற்றின் மூலம் வீட்டை குளுகுளுன்னு வைக்க சில டிப்ஸ்!

கோடைக்காலத்தில் அனலை சமாளிக்க ஏசி இல்லாமல் ஃபேன் காற்றின் மூலம் வீட்டை குளுகுளுன்னு வைத்துக்கொள்ள சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் கடுமையாக வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் அனலால், வீட்டிற்கு இருந்தாலும் சாலைகளில் இருப்பது போன்றே உடல் சூடு இருக்கிறது. இதனை சமாளிக்க நீரும் மட்டுமே நமக்குச் சற்று ஆறுதலாக இருக்கும் நிலையில், சிலர் ஏசி மூலம் வீட்டை குளுமையாக வைத்துக்கொள்கின்றனர். இதன்மூலம் அனல் குறைந்தாலும், உடல்நிலைக்கு சற்று தீங்குவிளைக்கிறது. பொதுவாகவே காற்றில் ஈரப்பதம் இருந்தால் நாம் இருக்கும் இடங்கள் குளுமையாக இருக்கும். அந்தவகையில், ஏசி இல்லாமல், ஃபேன் காற்றின் மூலம் வீட்டை குளுகுளுன்னு வைத்துக்கொள்ள சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வீட்டை குளுமையாக வைக்க வீட்டில் ஆங்காங்கே மண் பானைகளில் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.இப்படி நீரை நிரப்பி வைப்பதன் மூலம், அந்த பானையில் இருந்து ஆவியாகும் நீர் காற்றை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும். இதுமட்டுமல்லாமல், அடிக்கடி மண்பானைகளில் உள்ள நீரை குடிப்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதேபோல், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி ஃப்ரிஜரில் வைத்து ஐஸ் கட்டி ஆனதும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதையடுத்து வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேன் முன் அந்த ஐஸ் கட்டிய வைத்துக்கொள்ளுங்கள். ஃபேன் இல் இருந்து வரும் காற்று குளுகுளுவென இருக்கும். வீடு முழுவதும் இந்த குளிர்ச்சி வேண்டும் என்றால், ஏர்கூலரில் தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக ஐஸ் கட்டிகளை போட்டுக்கொள்ளலாம் இது ஏசி போலவே குளுமையை தருகிறது. கோடைக்காலத்தில் முடிந்த அளவிற்கு ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்துவையுங்கள். குறிப்பாக மாலை 6 மணியில் இருந்து அடுத்தநாள் காலை வரை திறந்து வைத்தால் குளிர்ச்சியான சூழல் நிலவும். இதுமட்டுமில்லாமல் அதிகாலை 3 மணியில் இருந்து காலை 7 மணிவரை வரும் காற்று மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

இதுமட்டுமல்லாமல், வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு ஸ்கிரின் போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இது நேரடியாக சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை வீட்டுக்குள் வருவதை அனுமதிக்காது. குறிப்பாக ஸ்கிரின் வெள்ளை நிறத்தில் இருந்தால், எளிதில் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வீட்டில் இருக்கும் ஸ்கிரின்களுக்கு அவ்வபோது ஸ்ப்ரே பண்ணிட்டே இருங்கள். இப்படி செய்வதால், வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் வெப்பமான காற்றின் சூட்டை குறைக்க இயலும்.

மேலும் வீட்டில் உள்ள சீலிங் ஃபேன் மற்றும் டேபிள் ஃபேனை ஒரே நேரத்தில் பயன்படுத்துங்கள். ஏனென்றால் சீலிங் ஃபேன் வீடு முழுக்க காற்றை பரப்புவதற்கு உதவும். டேபிள் ஃபேன் எல்லா திசைகளிலும் சுழலும். இதனால் ஏர் சர்குலேஷன் இருந்துக்கொண்டே இப்பதால் சூட்டை குறைக்கலாம். வெயில் மற்றும் சூட்டை தணிப்பதற்கு இயற்கையாகவே நமக்கு மரங்கள், செடிகள் உள்ளன. இதனால் முடிந்த அளவிற்கு வீட்டில் அங்காங்கே ஏதாவது ஒரு செடிகளை வைத்துக்கொள்ளலாம்.

Kokila

Next Post

கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களும்... அறிகுறிகளும்!... இதை தவிர்க்க சில டிப்ஸ்!

Wed Apr 5 , 2023
கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அந்தவகையில் இத்தகைய நோய்களை தடுக்கும் சில வழிகளை பார்க்கலாம். கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இது சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் ஏற்படுத்தும். சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் நம் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் ஏற்படுகிறது. பொதுவான அறிகுறிகளாவன தோல் சிவந்து […]

You May Like