fbpx

’வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது’..! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஜி.கே.உலக பள்ளியில் ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பது குறித்தும், மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

’வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது’..! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 5 நாள் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யும் திட்டம் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒருசில காரணங்களுக்காக மாணவ-மாணவிகள் தவறான முடிவுகளை எடுப்பது குறையும். மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்காது. மாணவ-மாணவிகள் கவனத்தை ஒழுங்குப்படுத்தி படிப்பில் முழு கவனத்தினை செலுத்துவதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள், மாதம் ஒருமுறை திரைப்படம் காண்பித்தல், மன அழுத்தத்தை போக்கி தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி இதில் வெற்றி பெறுபவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வதற்கு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

’வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது’..! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இத்திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும். கல்வித்துறையில் பழைய நடைமுறையை மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம். அரசு மற்றும் தனியார் பள்ளி என அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாக உள்ளது. எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளனவோ, அவைகள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

’வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது’..! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

நாலு வயது சிறுமி.. தந்தை செய்த கொடூர செயல்.. அதிர்ச்சியில் உறவினர்கள்...!

Thu Jul 21 , 2022
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் பகுதியில் குடியிருப்பவர் சுந்தர்ராஜ். இவர் கடந்த 2020 ஆம் வருடம் அவரது நாலு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.   இது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தில் பெரும் பிரச்சனையாகி உள்ளது.   இதை இப்படியே விட்டால் கடைசி வரைக்கும் இந்த பாலியல் தொல்லை நீடிக்கும் என்பதை உணர்ந்த குடும்பத்தினர், சுந்தர்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் […]

You May Like