கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு பள்ளிகளை அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு செய்தனர்.
நடப்பு கல்வியாண்டு முதல் இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் பள்ளிக்கல்வித்துறையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலில் தேவைப்படும் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் இவர்களுக்கான பயிற்சி சான்றிதழை தலைமை ஆசிரியரே வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.