பலரின் மனம் கவர்ந்த நடிகை என்றால் அது சாய்பல்லவி தான். அவரது இயற்கை அழகை பார்த்து வியக்காத மனிதர்களே இல்லை என்று கூட சொல்லலாம். கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் இல்லாமலும் அழகாக இருக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் இவர். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தினமும் சுமார் 2 லிட்டர் இளநீர் குடிப்பதாக கூறியிருந்தார்.
இது குறித்து பிரபல மலையாள பத்திரிகையான மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் இளநீர் ரெகுலராக குடிப்பது உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். அந்த வகையில், இப்படி தினமும் நிறைய இளநீர் குடிக்கலாமா என்பதை பற்றி தெரிந்துக்க்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
கலப்படமே இல்லாத சுத்தமான ஒரு இயற்கை பானம் என்றால் அது இளநீர்தான். இளநீரில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் இளநீர் குடிப்பதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ரத்த அழுத்தம் குறையும், கிட்னியில் கற்கள் ஏற்படாமல் தடுக்கும், சருமம் தங்கம் போல் மினுமினுக்கும். ஆனாலும், இளநீரை அதிகமாக குடிப்பதால் உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) இளநீரை அதிகப்படியாக குடிக்கும் போது கடுமையான ஹைபர்காலேமியா (severe hyperkalemia ) ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஹைபர்கலோமியா என்பது, ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்க கூடியது. இதனால் இதய பாதிப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல், கிட்னி கோளாறு உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது.
மேலும், இளநீரில் அதிக பொட்டாசியம் இருப்பதால், இது இரத்தத்தில் சமநிலையற்ற எலக்டோலைட் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்ததை ஏற்படுத்தக் கூடும். இதனால், நாள் ஒன்றுக்கு கால் லிட்டர் அதாவது 250 மில்லி இளநீர் குடிப்பது மட்டும் தான் உடல் நல்லது.
Read more: மருத்துவமனைக்கே போகாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அப்போ தொடர்ந்து 10 நாள் இந்த ஜூஸ் குடிங்க..