fbpx

ராம நவமி வன்முறை…! மாநிலத்தில் பதட்டம்…! ஹவுரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்…! முதல்வர் உத்தரவு…

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வன்முறை காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை 144 தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஹவுரா போலீசார் கூறியதாவது; சம்பவம் தொடர்பாக இதுவரை நேற்று 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ராம நவமி வன்முறை தொடர்பாக 36 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 15 பேர் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹவுராவின் காசிபராவில் வெள்ளிக்கிழமை புதிய கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் சிவி ஆனந்த போஸ் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்து, தடை உத்தரவுகளை விதிக்கவும், காவல்துறையினரின் பணியை அதிகரிக்கவும் முடிவு செய்தனர்.

Vignesh

Next Post

பத்திரப்பதிவு கட்டணம் 4 % தில் இருந்து 2 % சதவிகிதம் குறைப்பு...! இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு...!

Sat Apr 1 , 2023
பத்திரப்பதிவு கட்டணம் 4 % தில் இருந்து 2 % சதவிகிதம் குறைத்து அறிவிக்கப்பட்ட நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். அப்போது இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2 %, பதிவுக் கட்டணம் 2 % செலுத்த வேண்டும். எளிய நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கிக் […]

You May Like