தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த தேர்தலில் தவெகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்துள்ள பதிலை இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார். அதனைத்தொடர்ந்து, வரும் 23 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே மநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
விஜய்க்கு தொடங்கியதில் இருந்தே சீமான் ஆதரவாக பேசி வருகிறார். இதனால், வரும் தேர்தலில் விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தூத்துகுடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், 2026 சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், தற்போதே 60 வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பார்முலா 4 கார் பந்தயம், மேல் தட்டு மக்களின் விளையாட்டு. யார் என்னை கேட்பது?, யார் என்னை தடுப்பது? என்ற பதவி பண திமிரில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடத்துவதற்கு சாலையை சீரமைக்கலாம், கல்விக்கூடங்களை சீரமைக்கலாம். ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. பந்தயம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பினார்.
Read more ; 22 பேருடன் காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து…! 17 பேரின் உடல்கள் மீட்ப்பு..!