fbpx

சென்னை போயஸ் கார்டனில் ஒரு மணி நேரம் சீமான் – ரஜினிகாந்த் சந்திப்பு…! என்ன காரணம்…?

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதியே ரஜினியை சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப் சென்றது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரும் தேர்தலுக்கு முன் கட்சியைப் பலப்படுத்தவும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலையும் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு முன்பு விஜய்யை ஆதரித்து பேசி வந்த சீமான் அதன் பிறகு விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் விவாதமானது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். இந்த சூழலில் சீமான் ரஜினியை நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

English Summary

Seeman – Rajinikanth meet for an hour at Poes Garden, Chennai

Vignesh

Next Post

உங்கள் கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா?? இதை மட்டும் செய்து பாருங்கள்..

Fri Nov 22 , 2024
do-this-to-remove-blocked-sink

You May Like