fbpx

Seeman | நாம் தமிழர் கட்சிக்கு ”மைக் சின்னம்”..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கட்சியினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாகவே தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read More : BIG BREAKING | பணிந்தார் ஆளுநர்..!! அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி..!!

Chella

Next Post

Candidates | தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!! தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் வெயிட்டிங்..!!

Fri Mar 22 , 2024
மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமாக தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மக்களவைத் தோதலில் பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் […]

You May Like