தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை (ஜூலை 13) இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது.
முன்னதாக, நடப்பு ஆண்டின் தேர்வு அட்டவணையும் சில காலத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. பள்ளிகள் மும்முரமாக இயங்கி வரும் நிலையில், இந்தாண்டு சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இது, அறிவிக்கப்பட்டபோதே விமர்சனத்திற்குள்ளானது. மாணவர்களுக்கு விடுப்பு வேண்டாமா என பலரும் கேள்விகளை தொடுத்தார்கள். ஆனால், ஒரு மாதம் பள்ளிகள் தொடர்ந்து இயங்கியது குறிப்பிடத்தக்கது.
Read More : ’மின் இணைப்பு பெற இனி இந்த சான்றிதழ் தேவையில்லை’..!! ஆனால் ஒரு சிக்கல்..!! என்ன தெரியுமா..?