fbpx

Holiday: செம்ம ஹேப்பி நியூஸ்!… மாணவர்களுக்கு கோடை விடுமுறை!… எத்தனை நாட்கள் தெரியுமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Holiday: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகிவருகின்றன.

நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது சண்டிகர் மற்றும் மத்திய பிரதேச பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. சண்டிகர் மாநிலத்தில் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மொத்தம் 39 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய பிரதேச மாநிலத்தில் மே 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 45 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை மே 1 முதல் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Readmore: ரேஷன் அட்டைத்தாரர்களே!… வந்தாச்சு புதிய செயலி, புகார் எண்கள்!… தமிழக அரசு அதிரடி!

Kokila

Next Post

JKNF அமைப்பிற்கு 5 ஆண்டு தடை...! மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு...!

Wed Mar 13 , 2024
ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நயீம் அகமது கான் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உத்தரவில்; ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை […]

You May Like