தமிழகத்தை சேர்ந்த மூத்த ஒரு பாஜக தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமையில் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைவராக உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஆளுநர் பதவியும் வழங்கப்படுவது பாஜகவில் வழக்கமாகி இருக்கிறது. இந்த வரிசையில் தேர்தலில் வெற்றி பெறாமலே நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து எல் முருகன் என்பவர் தற்போது மத்திய இணை அமைச்சராகவும், பாஜக தலைவர்கள் ஆளுநர் பதவியிலும் இருக்கின்றனர். மேலும் முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவியில் சிறப்பித்து வருகின்றார்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு பாஜக மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்குவதாக பாஜக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையில் பாஜக மூத்த தலைவரான மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராதாகிருஷ்ணன், எச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது.