fbpx

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்..!! அரசியல் கட்சி தலைவர் இரங்கல்..!!

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா முதுமை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 102.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மாணவர் பருவத்திலேயே போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, விவசாய சங்க தலைவராக திகழ்ந்த இவர், 1967, 1977, 1980 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று 3 முறை மதுரையில் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டவர். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மந்தமாக செல்லும் நிகழ்ச்சி..!! சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..!! நீ ஒரு நரி.. நீ ஒரு அமுல்பேபி..!! ரணகளமாகும் வீடு..!!

Wed Nov 15 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக உள்ளது. முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சண்டை, சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது 8-வது வாரத்தில் உள்ளது. பிரதீப்பால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல். பிரதீப்பின் எவிக்‌ஷனால் ரசிகர்கள் கொந்தளித்ததை போல் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையேயும் பிரச்சனை வெடித்தது. இதனால் கடந்த வாரம் […]

You May Like