செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது ஆளுநர் பாஜகவை போல செயல்படுகிறார் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அமலாக்கத்துறையை தன்னுடைய கிளை அலுவலகம் போல பாரதிய ஜனதா கட்சி மாற்றி இருப்பதால் தான் ஆளுநர் தான் எடுத்த முடிவு சரியானது என்று தெரிவித்துள்ளார் எனக்கூறியிருக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தொடர்பாக நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதேபோல அமலாக்க துறையை தன்னுடைய கிளை அலுவலகம் போல் பாஜக மாற்றி இருப்பதால் தான் எடுத்த முடிவு சரியானது எனவும் ஆளுநர் பதவி தேவை இல்லை என்ற திமுகவின் நிலையை உறுதிப்படுத்தும் விதமாகவும் பேசி உள்ளார். மாநில அரசு சுமுகமாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது என்று ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றும் விமர்சனம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.