சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் அதோடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
மேலும் அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட இருவரும் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டது. சென்ற சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் நிலவி வரும் மக்கள் பிரச்சனைகளை எந்தவிதமான தடையும் இல்லாமல் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்ற விதத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி ஆக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசி அவர், முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சிறை கைதியாக இருக்கின்ற ஒருவரை அமைச்சர் பதவியில் வைத்திருப்பது நகைப்புக்குறியதாக உள்ளது எடப்பாடி பழனிச்சாமி