சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் முக்கியமான மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு நடுவே ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஆகவே பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் இன்று காலை 5 15 மணி அளவில் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடத்தியது.
இந்த நிலையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்கு நான்கு பகுதிகளில் அடைப்பு சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் காவிரி மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு செந்தில் பாலாஜி டிவியில் சிகிச்சை பிரிவில் பால் துறை மருத்துவர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.