fbpx

”தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”அனைத்து மாணவ செல்வங்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள். இதுவரை 2,467 கோடி ரூபாய் பள்ளிகளின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் எத்தனை கட்டிடங்கள் பள்ளிகளுக்காக கட்டப்பட்டுள்ளன..? நாங்கள் மட்டுமே பள்ளிக் கல்வித்துறைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி 10 குழந்தைகள் வெளியே செல்லும்போது ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும்.

பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று செல்ல வேண்டும். ஆட்சியரின் ஒப்புதலோடுதான் செல்ல வேண்டும் என நாங்கள் கூறியுள்ளோம். மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அவர்களது ரகசியங்கள் காக்கப்படும். பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து அவர்கள் அதை மூடி மறைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என கூறினார்.

Read More : மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பெற்றோர்..!! காதல் கணவருடன் பைக்கில் சென்றபோது எமனாக மாறிய துப்பட்டா..!!

English Summary

Work is in progress to the extent of budgeting separately for the school education department.

Chella

Next Post

மனைவி பெயரில் போலி இன்ஸ்டா அக்கவுண்ட்.. அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்ட கணவன்..!! கள்ளக்காதலியுடன் சேர இப்படி ஒரு பிளான் அஹா..

Thu Nov 14 , 2024
Husband Creates Fake Account with Girlfriend to Defame Wife, Uploads Private Photos

You May Like