கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
கேரளாவின் முன்னா முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் உம்மன் சாண்டியின் மகன் தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.. தனது தந்தைக்கு லேசான நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்… மேலும், முதல்வர் பினராயி விஜயன் தன்னை நேரில் அழைத்து தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று மருத்துவமனைக்குச் சென்று உம்மன் சாண்டியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ் “ முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுப்படி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றேன். நேற்று முதல்வர் உம்மன் சாண்டியின் மகனை அழைத்து, அவரது மகள் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார். மருத்துவமனையில் டாக்டர் மஞ்சு தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. உம்மன் சாண்டியின் உடல்நிலையை மருத்துவக்குழு கண்கானித்து வருகிறது..” என்று தெரிவித்தார்.
உம்மன் சாண்டி 2004 முதல் 2006 வரையிலும், மீண்டும் 2011 முதல் 2016 வரையிலும் 2 முறை கேரள முதல்வராக பதவி வகித்தார். 2006 முதல் 2011 வரை கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.