புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது இந்தியாவில், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 5 நோயாளிகளில் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
அந்த வகையில் புதுச்சேரியில் சமீபகாலமாக இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.. இந்நிலையில் புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்..