நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக, பல்வேறு அதிரடி சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றி வருகின்றனர். ஆனாலும் அந்த சட்டங்கள் அவர்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்தியதாக தெரியவில்லை.
அதற்கு மாறாக இது போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு என்னதான் வழி என்று பொதுமக்கள் புலம்பியவாறு உள்ளனர்.
அந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஒருவர் நால்வரும் பள்ளிக்கு ஆட்டோவில் சில்லறை வழக்கமாக கொண்டிருந்தார். இத்தகைய நிலையில் தான், பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோ ஓட்டுனர் வராததால், அவருக்கு பதிலாக வேறொரு புது ஆட்டோ ஓட்டுனர் வந்திருக்கிறார். ஆகவே ஆட்டோவில் தனியாக இருந்த அந்த பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
ஆட்டோ ஓட்டுனரின் செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அலறி கூச்சலிட்டார். இதனை அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கவனித்து உடனடியாக அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து வந்து, மடக்கி பிடித்தனர்.
பின்பு பொதுமக்கள் அந்த மாணவியிடம் நடந்தது என்ன என்று விசாரிக்க, ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆகவே ஆட்டோ ஓட்டுவதற்கு பொதுமக்கள் தர்ம அடி வழங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல் துறையினர்