கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள த.பாளையம் பொன்னையன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருடைய கரும்புத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு ஆளாயினர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாரலாத்தை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் அவர் எப்படி உயிரிழந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் கொலை செய்யப்பட்டவர் வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் ராஜசேகர்(34) என்று தெரிய வந்தது. இவருடைய மனைவி மஞ்சுளாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது, ராஜசேகரன் 10 வருடங்களுக்கு முன்னால் மஞ்சுளா காதலித்து திருமணம் இவர்களுக்கு 3️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு ஆளான ராஜசேகரன், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். நாள்தோறும் குடித்து விட்டு வந்து மஞ்சுளாவுக்கு தொடர்ந்து, பாலியல் தொந்தரவு வழங்கியிருக்கிறார். அதோடு சரி வர வீட்டுக்கு பணம் கொடுக்காததால் குடும்பம் கஷ்டத்தில் இயங்கி இருக்கிறது. ஆகவே மஞ்சுளா வேலைக்கு சென்று வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மட்டுமே மஞ்சுளா தன்னுடைய நெருங்கிய தோழியான வினோதினியிடம் இது பற்றி தெரிவித்து அழுது இருக்கிறார். வினோதினி மஞ்சுளா படும் கஷ்டத்தை தன்னுடைய கணவர் சசிக்குமாரிடம் தெரிவித்துள்ளார் ஆகவே நால்வரும் இணைந்து ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 27ஆம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து அவருடைய தோழி வினோதினியின் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன் பிறகு சசிகுமார், மோகன் உள்ளிட்ட இருவரும் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மதுவில் விஷம் கலந்து கொடுத்து ராஜசேகரை குடிக்க வைத்திருக்கிறார்கள். அதனை குடித்த சற்று நேரத்தில் ராஜசேகர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உடலை யாரும் பார்க்காத விதத்தில், அங்கிருந்த கரும்புத் தோட்டம் ஒன்றில் வீசிவிட்டு சென்று விட்டதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.