fbpx

‘குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்..’ இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் ஷாருக்கான், அவருடைய மனைவி கவுரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 5-ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்  தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடியில்,  மனைவி கௌரி கான் மற்றும் குழந்தைகளான சுஹானா கான், ஆர்யன் கான்  ஆகியோருடன் வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ஷாருக்கானின் இரண்டாவது மகன் அப்ராம் இவர்களுடன் வந்த போதும் வாக்களிக்க இவருக்கு வயது இல்லாத காரணத்தால், வெளியில் நின்றிருந்தார். வாக்கு செலுத்திய பின்னர் குடும்பமாக அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். மேலும் ஷாருக்கானை பார்க்க அங்கு கூட்டம் கூடியதால், போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்தனர். மேலும் மும்பையில் உள்ள மற்ற வாக்கு சாவடிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்களின் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Next Post

ஈரான் அதிபரின் மரணம் : இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..!

Mon May 20 , 2024
ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, மே 21 அன்று இந்திய அரசு அரசு துக்க நாளாக அறிவிக்கிறது. ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி […]

You May Like