fbpx

கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மனு..! மே 20ஆம் தேதி விசாரணை

கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு மே 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீடு, கார் மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் சட்டவிரோதமாக கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிவு செய்தனர். தொடர்ந்து, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சவுக்கு சங்கர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு சென்ற சவுக்கு சங்கர், தனது கையை போலீசார் உடைத்தாக நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நாளை உடன் நிறைவடைகிறது. இதற்கு மத்தியில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும் வழியில் பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இன்று மாலை 4 மணிக்குள் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வரும் மே 20ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்து கோவை நீதிமன்ற திநீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். அதன்படி, சவுக்கு சங்கர் கோவையிலும், மதுரையிலும் தாக்கல் செய்த ஜாமீன் வழக்குகள் வரும் மே 20ஆம் தேதி ஒரே நாளில் விசாரணைக்கு வருகிறது.

Read More: “ஊழியர்களை சீனாவில் இருந்து வெளியேற சொல்லும் மைக்ரோசாப்ட்..!” என்ன காரணம் தெரியுமா?

Rupa

Next Post

நாளை 80% மழைக்கு வாய்ப்பு!! சிஎஸ்கே, ஆர்சிபி மேட்ச் என்னவாகும்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Fri May 17 , 2024
நாளை மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர், அடுத்தகட்டத்தைத் தொட இன்னும் ஒருசில போட்டிகள் மட்டுமே உள்ளன. அதற்காக, புள்ளிப் பட்டியலில் இடம்பிடிக்க சில அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. தற்போதைய பட்டியலின்படி, கொல்கத்தா அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இடத்தில் […]

You May Like