fbpx

ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகனுக்கு ஷாருக்கான் கொடுத்த Shock Reply.! ‘Ask SRK’ அமர்வில் வெளிவந்த ருசிகர தகவல்.!

ஷாருக்கான் தனது X தளத்தில், ‘Ask SRK’ அமர்வு ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகன் தனது பாடல்களைப் பாடியதற்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷாருக்கான் பிசியான நடிகராக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் தவறியதே இல்லை. அவ்வப்போது தனது X தளத்தில், ‘Ask SRK’ என்ற அமர்வை நடத்தி வருகிறார். அதன் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி மகிழ்கிறார். அவருடைய பதில்களில் புத்திசாலித்தனமும், குறும்பும் எப்பொழுதும் வெளிப்படும். அதே வகையில் அவர் சமீபத்தில் நடத்திய ‘Ask SRK’ அமர்வில் தனது படங்களை பற்றி மட்டுமல்லாமல், ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகன் தனது பாடல்களைப் பாடியதைக் குறித்தும் பதிலளித்தார்.

ஜான் சினா தனது உடற்பயிற்சி அமர்வின் போது ‘தில் தோ பாகல் ஹை’ படத்திலிருந்து ‘போலி சி சூரத்’ பாடலைப் பாடியது வைரலானது. அந்த வீடியோவை கண்ட ஷாருக்கான், அவருக்கு நன்றி தெரிவித்து, “நீங்கள் பாடியதை நான் மிகவும் விரும்புகிறேன். எனது பாடல்களின் தொகுப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களிடமிருந்து மீண்டும் ஒரு டூயட் பாடலை எதிர்பார்க்கிறேன்”, என்று ஜான் சீனாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான, அல்லு அர்ஜுனின் மகன் அயன் ‘டுங்கி’ படத்தில் இடம்பெற்ற ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதனை மிகவும் ரசித்த ஷாருக்கான், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் பயன்படுத்திய வசனத்தை வைத்து மிகவும் ரசிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், அல்லு அர்ஜுனின் மகனுக்கு நன்றி தெரிவித்து,” நீங்கள் ஃப்ளவர் அண்ட் ஃபயர் ஒன்று சேர்ந்த கலவை” என்று கூறி பாராட்டியுள்ளார். பின்னர் அல்லு அர்ஜுனை டேக் செய்து, “தற்போது எனது பிள்ளைகளையும், புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலைப் பாடுவதற்கு பயிற்சி அளிக்க போகிறேன்” என்று கூறியுள்ளார். இவரது பதில்கள் பலராலும் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

தற்போது பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய படங்களில் ஷாருக்கான் நடித்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அவரது அடுத்த படமான ‘டைகர் vs பதான்’ படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பதான் 2 படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary: Sharukh khan replied about John Cena and Allu Arjun’s son singing his songs in ‘ASK SRK’ program.

Read More: ஜூலை 1 முதல் நடைமுறை.! புதிய குற்றவியல் சட்டங்கள்.! தீவிரவாதம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை.!

Next Post

Holiday | செம குட் நியூஸ்..!! மக்களே சொந்த ஊருக்கு போக ரெடியா..? மார்ச் மாதம் 11 நாட்கள் விடுமுறை..!!

Mon Feb 26 , 2024
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஏராளமான நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால், வெளியூர் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லாத நிலையில் மார்ச் மாதம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வருகிறது. […]

You May Like