fbpx

பகீர்..!! காதலனை துண்டு துண்டாக வெட்டி வீட்டிலே புதைத்த பெண்..!! விசாரணையில் அம்பலமான உண்மை!! நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிப்பவர் புஷ்பா. இவரது கணவர் வினோத். இருவரும் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்த பீகார் மாநிலம் முனியாரி அணையை சேர்ந்த சிவ்நாத் என்ற இளைஞனுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் புஷ்பாவிற்கு சிவ்நாத் மீது சளிப்பு ஏற்பட்டுள்ளது. மெல்ல மெல்ல சிவ்நாத்திடம் இருந்து புஷ்பா விலக ஆரம்பித்துள்ளார். ஆனால் அவளுடனான உறவை முறித்துக் கொள்ள சிவநாத் தயாராக இல்லை. அந்த பெண் தனது கணவர் வினோத்திடம் முழு விஷயத்தையும் கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து சிவ்நாத்தை கொலை செய்ய தீட்டம் தீட்டியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு, புஷ்பா தனது நிறுவனத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு சுவன்சாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தோழி வீட்டிற்கு தன் காதலன் சிவ நாத்தையும் வரவழைத்துள்ளார். நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல், அங்கு சிவ்நாத் சென்றுள்ளார். காதலியை சந்திக்க வீட்டிற்கு சென்ற இளைஞனை பெண்ணின் கணவன் வினோத் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் கூர்மையான ஆயுதத்தால் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி தனது தோழியின் வீட்டிலே புதைத்துள்ளனர். இதையடுத்து வினோத்தும், புஷ்பாவும் ஹரியானாவில் உள்ள குருகிராமுக்கு திரும்பினர்.

சிவ்நாத் குடும்பத்தினர் பல நாட்களாகியும் அவரை காணாததால், பீகார் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். சிவ்நாத் செல்போன் எண் வைத்து விசாரணை தொடங்கியதில், அவர் கடைசியாக பேசியது புஷ்பா என்பதை கண்டறிந்தனர். புஷ்பாவிடம் நடந்த விசாரணையில் இந்த குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. சிவ்நாத் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புஷ்பா மற்றும் அவரது கணவர் வினோத்தை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய புஷ்பாவின் தோழி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

Read more ; சென்னை மக்களே அலர்ட்.. நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

English Summary

She chopped her lover into pieces and then buried him in her friend’s house… Police of 3 states are also shocked by this woman’s case

Next Post

முதல்வரே..!! கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு பண்ணுங்க..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

Wed Jul 24 , 2024
The Madras High Court has directed that the Chief Minister Mukherjee Stalin or the Ministers should visit the Kalvarayan Hill area.

You May Like