fbpx

ஜொலிக்கும் அயோத்தி!. 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை!. பக்தர்கள் பரவசம்!

Ayodhya: தீபாவளி பண்டிகையையொட்டிம் அயோத்தி ராமர் கோவிலில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, மிக பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கோவிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்குப் பிறகு, முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபோத்ஸவம், லேசர் லைட் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சரயு நதிக்கரை முழுவதும், லட்சக்கணக்கில் தீப விளக்கேற்றும் தீபோத்ஸவம் நடந்து வருகிறது.

கடந்த முறை நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியாக, நேற்று மாலை முதலே 55 நதியின் படித்துறைகளில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, 10வது படித்துறைகளில் 80 ஆயிரம் விளக்குகளைப் பயன்படுத்தி, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோல, அம்மாநில கால்நடைத்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட, மாசுபாட்டை ஏற்படுத்தாத 1,50,000 லட்சம் கவ் தீபங்களும் ஒளிரவிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

அதேபோல, மாநில தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் லேசர் ஒளி ஒலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உத்தரபிரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களால் ராம் லீலா நாடகம் நடத்தப்பட்டது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளின் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Readmore: இந்திய – சீன எல்லையில் தீபாவளி கோலாகலம்!. இருநாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டாட்டம்!

English Summary

Shining Ayodhya! 28 lakh lights lit Guinness record! Devotees are ecstatic!

Kokila

Next Post

UPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...? முழு விவரம்

Thu Oct 31 , 2024
Free Coaching Course for UPSC Exam

You May Like