fbpx

அதிர்ச்சி!. உக்ரைனில் 3,000 வடகொரிய வீரர்கள் பலி!. ரஷ்யாவுக்கு ஆதரவளித்ததால் பேரிழப்பு!

Ukraine-Russia war: ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy அறிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்கூட, இந்தப் போரினால் ரஷ்யாவின் அணு ஆயுதப் படை தளபதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை.

இந்தநிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை உக்ரைன் ஆக்கிரமித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியை மீட்கும் பணிக்கு ரஷ்ய ஆணுவத்திற்கு ஆதரவாக வடகொரிய ராணுவமும் களத்தில் இறங்கியுள்ளது. சுமார் 10000 வடகொரிய வீரர்கள் அங்கு சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குர்ஸ்க் பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy அறிவித்துள்ளார்.

டிசம்பரில் நடந்த போரில் வட கொரிய வீரர்கள் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரியாவும் கூறியுள்ளது. “வட கொரியா ரஷ்ய இராணுவத்திற்கு கூடுதல் துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அனுப்புவதால் ஏற்படும் அபாயங்கள்” குறித்து இராணுவத் தளபதி ஓலெக்சாண்டர் சிர்ஸ்கி எச்சரித்துள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா-உக்ரைன் போரில் வட கொரியர்கள் இணைந்ததற்கு உக்ரைன் உறுதியான பதில்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

Readmore: ”இதில் இல்லாத சத்துக்களே இல்லை”..!! இதய நோய், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் கேழ்வரகு..!! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..!!

Kokila

Next Post

Merry Christmas 2024!.“அன்பெனும் மழையிலே அதிரூபன் தோன்றினானே”!. களைகட்டும் கொண்டாட்டம்!. தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை!

Wed Dec 25 , 2024
Merry Christmas 2024: கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ‘இயேசு கிறிஸ்து’ அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையை வரவேற்கும் நேரம் இது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுக்கூறும் பண்டிகை இதுவாகும். மேலும் இது கிறிஸ்தவத்தில் மிகவும் புனிதமான நாள். மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை […]

You May Like